...

புதிய தயாரிப்புக்களை உருவாக்கல்.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு, இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையானது (SLTDA), முதலீடுகளையும் அபிவிருத்திகளையும் பெற்றுக்கொள்ளும் பொருட்டு பொதுத்துறை, தனியார்த்துறை மற்றும் வெளிநாட்டுத் துறைகளோடு கைகோர்த்துள்ளது.

போட்டிநிலைமையில் முன்னணியில் இருப்பதற்காக செயல்திறனுடைய சுற்றுலா நிறுவனங்களானது தொடர்த்தேச்சையாக புதிய தயாரிப்புக்களை தேடும் பணியில் இருக்க வேண்டும். பாரம்பரிய தயாரிப்பு சுழற்சிக் கோட்பாடாடு, பொதுவாக ஒரு தயாரிப்பானது வளர்ச்சி, முதிர்ச்சி, செறிவு மற்றும் விற்பனை மற்றும் லாபங்களில் சரிவு என்கிற படிநிலைகளைக் கொண்ட S வளையத்தை கொண்டிருக்கும் என விளக்குகிறது. இந்தக் கோட்பாட்டு மாதிரியானது சுற்றுலாத் தயாரிப்புக்களுக்கும் பொருந்தும் எனத் தோன்றுகிறது. காரணம் சுற்றுலாத்துறை நிறுவனங்களுக்கு தயாரிப்பு மேம்படுத்தல் மற்றும் புதிய தயாரிப்புக்களின் தேவையும் அவசியமாகிறது.

நிலையான சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான சுற்றுலாத்துறை தயாரிப்புக்களானது, வளங்களை லாபகரமாக பயன்படுத்தி தயாரிப்புக்களை மேம்படுத்த உதவுவதோடு ஸ்திரமான பொருளாதாரத்திற்கும் வழிவகுக்கும். மேலும் இது ஒரு நிலையான சுற்றுலாத்துறையின் கோட்பாடுகளை கருத்திற்கொள்வதோடு ஸ்திரமான சுற்றுலாத்துறைத் தயாரிப்புக்களை உருவாக்கவும் உதவும்.


 

அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள்


  • டச் பே விடுதி - கட்பிட்டி

  • தேதுவ லேக் விடுதி

  • பெந்தோட்டை மீள் அபிவிருத்தித் திட்டம்

  • கிழக்குக் கடற்கரை அபிவிருத்தி



தனியார் முதலீடுகள்


1968 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சட்த்தின் படி, இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி வாரியமானது சுற்றுலாத்துறை சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களை அனுமதிக்கவும் செயற்படுத்தவும் அதிகாரமுள்ள ஏக வாரியமாக காணப்படுகிறது.


புதிய சுற்றுலாத்துறை அபிவிருத்திப் பகுதிகள்


முன்னைய இலங்கை சுற்றுலாத்துறை சபையானது 1987 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க சுற்றுலா அபிவிருத்திச் சட்டத்தின் (திருத்தப்பட்டது) உட்பிரிவு 73 (அ) இன் படி (இது 1968 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சுற்றுலா அபிவிருத்திச் சட்டத்திற்கு திருத்தமாக வந்தது) சுற்றுலா அபிவிருத்திப் பிரதேசங்களாக 11 இடங்களை பிரகடனப்படுத்தியது. இந்தப் பகுதிகளில் இலங்கை சுற்றுலா சபையினால் சுற்றுலாச் செயற்பாடுகளை மாத்திரமே கட்டுப்படுத்த முடிந்தது.

  • 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலாத்துறை சட்டத்தின் மூலம்(TA), இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையானது (SLTDA), ஏனைய பொருளாதார செயற்பாடுகளையும் கூட கண்காணிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் கீழ், ஒரு பிரதேசமானது சுற்றுலா அபிவிருத்திப் பிரதேசமாக (TDA) பிரகடனப்படுத்தப்பட்டது எனின், அனைத்துப் புதிய அபிவிருத்திகளும் SLTDA இனால் வகுக்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் படியே நடைபெறுகிறது என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


செயன்முறை

  • சுற்றுலா அபிவிருத்திப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தக்கூடிய பிரதேசங்களை இனம் காணல்

  • நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கும் TDA இன் உள் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தளம் குறித்த விதிமுறைகளைத் தயார் செய்தல்.

  • இந்த விதிமுறைகளானது சுற்றுச்சூழல் அமைச்சர் ( உட்பிரிவு 29(3)(அ) மற்றும் (இ) TA) மற்றும் தொல்லியல்துறை ஆணையாளர் (உட்பிரிவு 29(4)(அ) மற்றும் (ஆ) TA) அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட அமைச்சர்களோடு (உட்பிரிவு 29(5) TA) கலந்துரையாடியே தயாரிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகளானது பொதுவீதிகள், பொது நினைவுச்சின்னங்கள், வணக்கஸ்தளங்கள், பொதுப் பூங்காக்கள், பொது அலுவலகங்கள், பாடசாலைகள், மருந்தகங்கள் மற்றுமு அரசாங்கம், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளினால் வழங்கப்படும் பொது இடங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றிற்கு பிரயோகிக்கப்பட மாட்டாது.

  • TA இன் 26(2) ஆம் உட்பிரிவின் படி ஒரு இடத்தை TDA ஆக பிரகடனப்படுத்த முதல் மக்களிடம் கருத்துக்கேட்கப்படல் வேண்டும்.

  • TA இன் 29(2) ஆம் உட்பிரிவின் படி, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பரிந்துறையைப் பெற வேண்டும்.

  • TA இன் 27(2) ஆம் உட்பிரிவின் படி, சுற்றுலாத்துறை அமைச்சர், SLTDA இன் பரிந்துரையின் படி TDA க்களை வர்த்தமானியில் பிரசுரிக்கலாம். இது 10 வருடத்திற்கு செல்லுபடியாகும்.

  • TA இன் 30 ஆம் உட்பிரிவின் படி, TDA உள்ளே, SLTDA ஆனது சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து விதிமுறைகளை வகுப்பதுடன், மலையேற்றப் பகுதிகள் மற்றும் இயற்கையான பாதைகள் மற்றும் இதைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்கள் என்பவற்றைப் பிரகடனப்படுத்தலாம்.

  • நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்யும் பொருட்டு SLTDA ஆனது TDA இன் மேல் (உட்பிரிவு 25 TA) அதிகாரம், கடமைகள் மற்றும் திறம்பட செயற்படுவதற்கான நியாயாதிக்கத்தைக் கொண்டிருக்கும். (உட்பிரிவு 27(3) TA). இது 1980 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் பழங்காலக் கட்டளைச்சட்டம் ( 18 ஆம் அத்தியாயம்) என்பவற்றின் படி சுற்றுச்சூழல் திட்டமிடல் மற்றும் தொல்பொருளியலைப் பாதுகாத்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருக்கும் (உட்பிரிவு 29(1) TA).

  • இதில் ஏதேனும் ஒரு விதிமுறையை யாராவது மீறினால், அவர் குற்றம் செய்தவராக (விசாரணைக்குப்பின்னர்) கருதப்பட்டு ரூபா. 25,000 இற்கு குறையாமலும் ரூபா. 100,000 இற்குக் கூடாமலும் ஒரு அபராதம் விதிக்கப்படும் (உட்பிரிவு 28(1) TA).)


பிற தேவைகள்

  • சுற்றுலாவிற்கு உக்ந்த இடங்களாக வரக்கூடிய வரலாற்று மற்றும் சுற்றூச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் மற்றும் வசதிகளை பட்டியலிடல். (உட்பிரிவு 26(3)(3) TA).

    (Sec 26 (3) (3) TA ).

  • உள்நுழையும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குதலும், சுகாதார அபாயங்களை தடுக்கவும் அல்லது தணிக்கவும் (உட்பிரிவு 27(4)(ஆ) TA)


பின்தொடர்த்தேச்சையான நடவடிக்கைகள்


  • 2003 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க சுற்றுலாத்துறைச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்கள் (CCD, UDA, போன்றவை) ஆராய்வதற்காக ஒரு சட்ட ஆலோசனை நிறுவனமொன்றின் உதவியை நாடுவதோடு, SLTDA இனால் பிரதேசங்களை சுற்றுலா அபிவிருத்திப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தத் தேவையான நடைமுறைகளைத் தயார்படுத்தல். இந்த சட்ட ஆலோசனை நிறுவனமானது, பரிந்துரைக்கப்பட்ட செயன்முறைக்காக, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினும் ஒப்புதல்களை பெற வேண்டும்.

  • சுற்றுலா அபிவிருத்திப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தக்கூடிய பிரதேசங்களை இனம் காணுதல்.

  • தெரிவுசெய்யப்பட்ட TDA க்ளுக்கான தளம்சார் சட்டங்கள் விதிமுறைகளை தயார்செய்தல்.

  • ஒவ்வொரு TDA இலும் SLTDA இன் தேவையான வளங்களை (மனிதவளம், நிதி, தேவையான சட்டமூலங்கள்) உள்ளடக்கிய ஒரு பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.


சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாச் சேவைகளைப் பதிவு செய்தல்


சுற்றுலா நிறுவனங்களானது 1968 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சுற்றுலா அபிவிருத்திச் சட்டத்தின் உட்பிரிவுகளுக்கு அமைவாகவே பதிவுசெய்யப்பட்டன. 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா சட்டத்தின் உட்பிரிவு 68(2) இன்படி, 1968 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சுற்றுலா அபிவிருத்திச் சட்டத்தின் அத்தியாயம் I பகுதி IV இன் உட்பிரிவுகள் 77,78,79,80,81 மற்றும் 82 என்பன ரத்துச்செய்யப்பட்டன. மேலும் தொடர்புடைய அட்டவணைகளும் ரத்துச் செய்யப்பட்டன.


TDA இன் உட்பிரிவு 77 சுற்றுலா விடுதிகள் விதி (4 ஆம் அட்டவணை)
TDA இன் உட்பிரிவு 78  சுற்றுலா முகவர் விதி (5 ஆம் அட்டவணை)
TDA இன் உட்பிரிவு 79    சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர்களுக்கான விதி (6 ஆம் அட்டவணை)
TDA இன் உட்பிரிவு 80 மற்றும் 81 குறிப்பிட்ட சுற்றுலா சேவை விதிகள் (7 ஆம் அட்டவணை)
TDA இன் உட்பிரிவு 82 ஏனைய விதிகள்


உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் ஏற்று கொள்ளப்பட்ட தரநிரலை மேம்படுத்தும், அமுல்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் நோக்கில் தற்போதைய அளவீடுகளை மதிப்பாய்வு செய்து தேவையான மாற்றங்கள் ஏதும் இருப்பின் அவை செய்யப்பட வேண்டும். பின்னர், அமைச்சர், SLTDA இன் பரிந்துரையின் பேரில் சுற்றுலா நிறுவனங்களை மற்றும் சுற்றுலா சேவைகளை வகைப்படுத்தல் மற்றும் பதிவுசெய்தலுக்காக குறித்த உத்தரவை வர்த்தமானியில் பிரசுரிப்பார். (உட்பிரிவு 48(1) TA). குறித்த உத்தரவானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். (உட்பிரிவு 48(2) TA).


பதிவு


 

 

  • சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா சேவைகளைப் பதிவு செய்தல் மாற்றும் உரிமம் வழங்கும் செயன்முறை குறித்த நடைமுறைகளை பரிந்துரைத்தல். (உட்பிரிவு 48(3)(6)(7)(8) TA).

  • குறிப்பிட்ட அளவீட்டிற்குள் வரும் அனைத்து சுற்றுலா நிறுவனங்களும் மற்றும் சுற்றுலா சேவைகளும் SLTDA இல் பதிவுசெய்துகொள்வதோடு ஒரு உரிமமும் வழங்கப்படும்.

    (உட்பிரிவு 48(3) TA).

  • பதிவுக்கட்டணம் மற்றும் உரிமைக்கட்டணம் என்பன அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்படும். (உட்பிரிவு 48(4) TA).

  • SLTDA இன் உரிமம் பெற்ற சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா சேவைகள் என்பவற்று உள்ளடக்கிய பதிவேட்டை பராமரித்தல்

  • அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற அனைத்து சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா சேவைகள் அனைத்து விளம்பரங்கள் மற்றும் தொடர்பாடலில் தெரியப்படுத்தப்பட வேண்டும். (உட்பிரிவு 48(9) TA).

  • SLTDA இல் பதிவுசெய்துகொள்ளாத ஏதேனும் ஒரு சுற்றுலா நிறுவனம் மற்றும் சுற்றுலா சேவையானது தன்னை SLTDA இல் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனமாக பிரகடனப்படுத்துவது ஒரு குற்றமாகும். (உட்பிரிவு 48(10) TA).

  • எங்களது அளவீடுகளுக்குள் வரும் எந்த சுற்றுலா நிறுவனம் அல்லது சுற்றுலா சேவையானது SLTDA இல் தம்மைப் பதிவுசெய்துகொள்ளும் வரை வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அது ஒரு குற்றமாகும். (உட்பிரிவு 48(4) TA).

  • உரிமம் மறுக்கப்பட்ட அல்லது ரத்துச்செய்யப்பட்ட எந்த நபரும் இதற்காக அமைச்சரால் நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் முறையிடலாம். குறித்த தீர்ப்பாயத்தின் கட்டமைப்பு மற்றும் தீர்ப்பாயம் பின்பற்ற வேண்டிய செயன்முறைகள் என்பன விவரிக்கப்படும். (உட்பிரிவு 51 TA).

  • அமைச்சர் அதிகாரத்தின் சின்னத்தை பரிந்துரைப்பார். முறையாக பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா நிறுவனங்கள் அந்தச் சின்னத்தைப் பயன்படுத்த அல்லது பார்வைக்குட்படுத்த அதிகாரம் உண்டு. (உட்பிரிவு 52(1) TA).
    SLTDA இன் அனுமதி இல்லாமல் அந்தச் சின்னத்தை பயன்படுத்துவது குற்றமாகும் (உட்பிரிவு 52(2) மற்றும் (3) TA). அதன் அபராதம் சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை.

  • SLTDA இல் பதிவுசெய்துகொள்ளாத ஏதேனும் ஒரு சுற்றுலா நிறுவனம் மற்றும் சுற்றுலா சேவையானது தன்னை SLTDA இல் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனமாக பிரகடனப்படுத்துவது ஒரு குற்றமாகும்.

    (உட்பிரிவு 48(10) TA).


சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா சேவைகளுக்கான ஒழுங்குவிதிகள்:


  • SLTDA இன் பரிந்துரையின் பேரில் அமைச்சர் சகல சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா சேவைகளுக்கான நடத்தை விதிகளை வகுப்பார். (உட்பிரிவு 49(1) TA).

  • சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா சேவைகள் நடத்தை விதிகளுக்கு இணங்கவில்லை எனில் அதிகபட்சமான தொகையாக ரூபா. 100,000 அபராதம் செலுத்த வேண்டும்.


சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா சேவைகளின் வகைப்படுத்தல்:


  • SLTDA இன் பரிந்துரையின் பேரில் அமைச்சர் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா சேவைகளுக்கான வகைப்படுத்தல் தரநிரல்களை வகுப்பார்.

    (உட்பிரிவு 50(1)(2) TA).

  • குறித்த தரநிரல்கள் பராமரிக்கப்படாவிடின் குறித்த நிறுவனங்களால் அவற்றின் தரநிரல்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • நிறுவனங்கள் தமது தரநிரல்களை பராமரிக்கத் தவறினால், SLTDA இனால் அவர்களின் உரிமங்கள் ரத்துச்செய்யப்படும் (உட்பிரிவு 50(3) TA).


SLTDA ஆனது 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா சட்டத்துடன் இணங்கிச் செல்வதை உறுதிப்படுத்த எடுக்கபடும் பின்தொடர்தேச்சையான நடவடிக்கைகள்


  • குறித்த சட்டத்தின் படி, ஒரு சட்ட ஆலோசனை நிறுவனமொன்றின் சேவையைப் பெற்றுக்கொள்ளத் தேவையான ஆவணங்களை தயார் செய்யப்படல் வேண்டும்.

  • தேவையான மனிதவள மற்றும் நிதிவளங்களை அடையாளம் காண்பதற்காக நாங்கள் தெரிவுசெய்யப்பட்ட முகாமைத்துவ நிறுவனங்களோடு இணைந்து செயற்படுவோம்.

  • இந்தச் சட்டத்தின் கீழ் சுற்றுலா அபிவிருத்திக்கான பிரதேசங்களை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. TDA இற்குள் பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்றால், சுற்றுலா நிறுவனங்களின் தரநிரல்களை கண்காணிக்க பெருநிறுவன சேவைப் பிரிவின் ஒரு ஊழியரும் அதே அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும்.

  • வெவ்வேறு மாவட்டங்களில் மாதாந்த மொபைல் சேவைகள் தொடரப்பட வேண்டும்.