...

SLTDA இல் திட்டங்கள்

சுற்றுலா உள்கட்டமைப்பு திட்டம்

2004 சுனாமி மற்றும் தீவில் நிகழ்ந்த அனைத்து அழிவுகள் காரணமாக, சுற்றுலாத் துறை நிலைமையை சிறப்பாக எதிர்த்துப் போராடுவதற்காக, இலங்கை சுற்றுலா வாரியம் இந்த கருத்தை அறிமுகப்படுத்தியது சுற்றுலா மண்டலங்கள். குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை அமைப்பதும், இந்த மண்டலங்களை திறமையாக நிர்வகிப்பதும் இதன் நோக்கமாக இருந்தது தற்காலிக சுற்றுலா வளர்ச்சியைத் தவிர்க்கும் பொருட்டு. இந்த மண்டலங்கள் ஒவ்வொன்றையும் சந்தைப்படுத்தும் நோக்கத்திற்காக, குறிப்பிட்டவை கருப்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

குச்சவெளி பீச் ரிஸார்ட்

  • மாகாணம் - கிழக்கு
  • மாவட்டம் - திருகோணமலை
  • கொழும்பிலிருந்து தூரம் - 300 கி.மீ
  • கொழும்பிலிருந்து தரை மார்க்கமாக தளத்தை சென்றடைய எடுக்கும் நேரம் - 05 மணித்தியாலங்கள் (அண்ணளவாக )
  • ஆகாய மார்க்கம் - விமானப்படையின் துறை வானூர்தி ஒன்று மற்றும் ஹெலிபேட்
  • கொழும்பிலிருந்து ஆகாய மார்க்கமாக தளத்தை சென்றடைய எடுக்கும் நேரம் - 45 மணித்தியாலங்கள்
  • ஏக்கர் ஒன்றின் விலை - 20 மில்லியன்
  • இடத்தின் குத்தகைக் காலம் - 99 வருடங்கள்
  • முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு - 445 ஏக்கர்கள்
  • தற்கால நிலவரம் - 1 ஹோட்டல் இயங்கி வருவதல், 2-4 கட்டுமானத்தின் கீழ்
  • உள்கட்டமைப்பு : சகல தொகுதிகளுக்கும் அடிப்படை உள்கட்டமைப்பு காணப்படல்.

 

திரு. தயாசிறி பெர்னான்டோ
உதவிப் பணிப்பாளர்,
திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் பிரிவு
தொ.பே.இ : 011-2437058, 011-3135941
விரிவு.215

டெட்டுவ லேக் ரெஸார்ட்

டெட்டுவ பென்தொட்டைக்கு கிழக்கே அமைந்துள்ளதோடு, இது நீர்நிலைகள், சதுப்பு நிலங்களோடு வயல் நிலங்களினாலும் செரிந்து காணப்படுகின்றது.

டெட்டுவ திட்டத்தின் நன்செய் நிலத்தின் 1,800 ஹெக்டேர்ஸ், தற்போதைய பென்தொட்டை விடுமுறை உல்லாசப்போக்கிடம கிழக்கில் அமைந்துள்ளது. அபிவிருத்தித் திட்டமானது, பழைய நீர்நிலைகளை மது கங்கையின் தெற்கே 20 கி.மீ மீள் திறப்பை இணைப்பதோடு, டெட்டுவ ஏரியின் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும்.

  • டெட்டுவ ஏரியின் உல்லாசப்போக்கிடம்
  • திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் பிரிவு


நேரடி தொடர்பு : 011-2437058, 011-3135941
விரிவு. 252

கல்பிட்டிய திட்டம்

தலைநகரம் கொழும்பிற்கு வடக்கே 150 கி.மீ தாரத்தில் அமைந்துள்ள கல்பிட்டிய இலங்கையின் வடமேல் மாகாணத்தின் மிக இரம்மியமான ஒரு கடற்பரப்பாகும். இது புத்தளம் காயலை, இந்து சமுத்திரத்தை விட்டு பிரிப்பதோடு பவளப்பாறைகள், தரைமட்ட கடலோர வெற்று நிலங்கள், உப்பளங்கள், கண்டல் சதுப்பு நிலங்கள், உப்பு நிலங்கள் மற்றும் பரந்த மணல் கடற்கரைகளை போன்ற பலவித வாழ்விடங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

2008ல் வழங்கப்பட்ட முதலீட்டு வாய்ப்புகளின் அடிப்படையில், இலங்கை சுற்றுலாத்துறை கல்பிட்டிய ஒல்லாந்த வளைகுடா ரிஸார்ட் அபிவிருத்தித் திட்டத்தை வெளியிட்டது.

கல்பிட்டிய தீவு உல்லாசப்போக்கிடம்
நேரடி தொடர்பு : 011-2437058
விரிவு . 240

பாசிக்குடா உல்லாசப்போக்கிடம

பாசிக்குடா உயர்தரமிக்க சூழலுக்கிசைவான, அலை சறுக்குவோரை கவரும் விதம் மேம்படுத்தப்படுமொரு திட்டம். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியோடு, 'ரூம்ஸ் ஒப் ஹோம்' (rooms of home) எனும் கருத்தின் கீழ், தரக்கட்டுப்பாட்டு உத்தரவாதத்துடன் கல்குடாவை அண்டிய பகுதி முழுவதும் உல்லாசப்போக்கிடமாக இனங்காணப்படும். இது உல்லாசப்போக்கிடம்- ஹோட்டல் என்பனவின் பொது நியதிக்கு புறம்பாக இருந்தாலும், உள்நாட்டு கலாச்சாரத்தை அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கேதுவாக அமையும்.

யால வன ரெஸார்ட்

  • மாகாணம் - தெற்கு
  • மாவட்டம் - ஹம்பாந்தோட்டை
  • கொழும்பிலிருந்து தூரம் - 292 கி.மீ
  • கொழும்பிலிருந்து தரை மார்க்கமாக தளத்தை சென்றடைய எடுக்கும் நேரம் - 05 மணித்தியாலங்கள் (அண்ணளவாக )
  • ஆகாய மார்க்கம் - விமானப்படையின் துறை வானூர்தி ஒன்று மற்றும் ஹெலிபேட்
  • கொழும்பிலிருந்து ஆகாய மார்க்கமாக தளத்தை சென்றடைய எடுக்கும் நேரம் - 45 மணித்தியாலங்கள்
  • ஏக்கர் ஒன்றின் விலை - 8 மில்லியன்
  • இடத்தின் குத்தகைக் காலம் - 99 வருடங்கள்
  • முதலீட்டாளர்களுக்கான இட ஒதுக்கீடு - இல்லை
  • தற்கால நிலவரம் - இயங்கும் ஹோட்டல்கள்- 2 , கட்டுமானத்தின் கீழ் உள்ள வன பங்களா- 1 , அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் பங்களாக்கள் - 6


திரு.ததீபன்
உதவிப் பணிப்பாளர்
திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் பிரிவு
தொ.பே.இ : 011-2437058
விரிவு. 420

பிராந்திய சுற்றுலா திட்டங்கள்



குறைந்த கவனத்தை ஈர்க்கும் திட்டங்கள்

சுற்றுலாத்துறை அமைச்சு குறைந்த கவனத்தை ஈர்க்கும் இடங்களை ஊக்குவிக்கும் திட்டங்களை துவங்கியுள்ளது.