...

வரலாறு

1966 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கமானது சுற்றுலாத்துறையை மேம்படுத்த, நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பின் அவசியத்து உணர்ந்து, அதன் மூலம் ஒருதிட்டமான மற்றும் கட்டமைப்பானதொரு முறையில் மேம்படுத்த முடிவு செய்தது. இலங்க சுற்றுலாத்துறை வாரியம் (1966 ஆம் ஆண்டு 10 இலக்க இலங்கை சுற்றுலாத்துறை வாரிச்சட்டத்தினால் உருவாக்கப்பட்டது) மற்றும் இலங்கை ஹோட்டல் ஸ்தாபனம் (1966 ஆம் ஆண்டு இலங்கை ஹோட்டல்கள் ஸ்தாபன சட்டத்தினால் உருவாக்கப்பட்டது) என்பன சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

வெளிநாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இலங்கை சுற்றுலா வாரியாமனது (CTB), மிகச் சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடிய மற்றும் நிதி நிர்வாகத்தில் நெகிழ்வுத்தன்மையுடய ஒரு சட்டரீதியான நிறுவனமாகும்.இதன் முதல் குழுவின் உறுப்பினர்களாக திரு. ஏ. சீ. எச். டி சொய்சா, திரு. எச். டப்ளியூ. ஜயவர்தன QC, திரு. ராப் தெரனியகல, திரு. உபாலி சேனாநாயக்க, டாக்டர். பீ. ஆர். தியாகராஜா, திரு சந்திர குரே (நிதியமைச்சினால் நியமிக்கப்பட்டவர்) மற்றும் உள்நாட்டு அரசின் பிரதிநிதியாக உள்நாடு அரசாங்கத்தின் ஆணையாளர் ஆகியோர் காணப்பட்டனர்.

இலங்கை ஹோட்டல்கள் ஸ்தாபனமானது பொது மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் கூடிய ஒரு கூட்டுப் பங்கு நிறுவனமாகும். சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட மற்றும் ஏனைய வசதிகளை வழங்கும் அரசாங்கத்தின் ஒரு வணிகப் பிரிவாக செயற்படுவதே இதன் நோக்கமாகும்.

1968 ஆம் ஆண்டு சுற்றுலா அபிவிருத்திச் சட்டமானது, இலங்கை சுற்றுலா வாரியத்திற்கு, சுற்றுலாத்துறையை திட்டமிடல் மற்றும் வரைமுறைகளோடு மேம்படுத்தும் சட்டரீதியான அதிகாரத்தை வழங்கியது. சுற்றுலா அபிவிருத்திச் சட்டமானது இலங்கை சுற்றுலா வாரியத்திற்கு அபிவிருத்தி நோக்கங்களுக்காக நிலங்களைப் பெற (இழப்பீடு மூலம்) அனுமதி அளித்தது. இந்தச் சட்டமானது நெடுஞ்சாலைகள் மற்றும் இயற்கை அழகுடைய இடங்களை பாதுகாக்கும் அதிகாரத்தையும், சுற்றுலா விடுதிகள் மற்றும் அனைத்து சுற்றுலா சேவைகளையும் பதிவுசெய்யும் மற்றும் வகைப்படுத்தும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளது.

வாரியத்தின் நோக்கங்களானது
  • சுற்றுப்பயணங்களை ஊக்குவித்தல், சந்தைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்

  • போதுமான, திறமையான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா சேவைகளை ஊக்குவித்தல், சந்தைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்,

வாரியமானது ஆறு முக்கிய செயற்பாட்டு பகுதிகளை இனம்கண்டு மேம்படுத்தியது.
  • சுற்றுலா ஆராய்ச்சி மற்றும் புள்ளியியல்

  • சுற்றுலாத் திட்டமிடல் மற்றும் மேம்படுத்தல்

  • சுற்றுலா சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரப்படுத்தல்

  • சுற்றுலா மேம்படுத்தல் சட்டத்தின் மூலம் சுற்றுலா வசதிகள் மற்றும் சேவைகளை ஒழுங்குபடுத்தல்

  • உள்நாட்டு சுற்றுலா மற்றும் சமூக உறவுகள்

  • சுற்றுலா மனிதவள மேம்பாடு

செயலகம் மற்றும் சட்டம், நிர்வாகம் மற்றும் பணியகம், நிதி மற்றும் கணக்குகள், உள்ளக கணக்குப் பரிசோதனை ஆகிய நான்கு சேவை திணைக்களங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கை ஹோட்டல் கல்லூரியானது அதன் பொறுப்பாக்களில் ஒன்றாக ஹோட்டல் தொழிற்துறையின் வெற்றிகரமான செயற்பாட்டிற்குத் தேவையான மனித வளத்திற்கு பயிற்சியளித்தல் காணப்படுகின்ற படியால் அது வாரியத்தின் முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அந்நேரத்தில் சுற்றுலாத்துறைக்கு காணப்பட்ட உலகளாவிய முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு சுற்றுலாத்துறையை ஒரு முறையான ஒழுங்கில் மேம்படுத்த வாரியமானது பின்வரும் முயற்சிகளை மேற்கொண்டது.
  • அனுபவம் வாய்ந்த மற்றும் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலாத்துறை நிபுணரா எஸ். என். சிப் அவர்களை நான்கு வருடங்களுக்கு வாரியத்திற்கான சுற்றுலாத்துறை சார்ந்த அனைத்து விடயங்களுக்குமான ஒரு ஆலோசகராக உதவுவதற்காக பணியில் அமர்த்தியது.ன திரு.

  • நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்வதற்கான எல்லைப்புற நடைமுறைகள் தரப்படுத்தப்பட்டதோ இலகுபடுத்தப்பட்டது.

  • USAID இன் நிதியுதவியோடு 1967 ஆம் ஆண்டு தொடக்கம், பத்து வருடத்திற்கான ஒரு சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான ஒரு முதன்மை திட்டமொன்று வகுக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்காக வாரியமானது ஹாவாயைச் சேர்ந்த சுற்றுலாத்துறை நிபுணர்களைக் கொண்ட ஒரு பல் - ஒழுங்கு அணியொன்றின் சேவையைப் பெற்றுக்கொண்டது.

  • அபிவிருத்தி நோக்கங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் அதிகாரம், வகைப்படுத்தல் சார் குறியீடுகளை அறிமுகப்படுத்தல், அனைத்து சுற்றுலா வசதிகள் மற்றும் சேவைகளையும் பதிவு செய்தல் மற்றும் உரிமங்களை வழங்குதல் விலைக் கட்டுப்பாடு விதிமுறைகளை அமுல்படுத்தல் போன்ற விடயங்களின் அதிகாரங்களை இலங்கை சுற்றுலா வாரியத்திற்கு வழங்கும் பொருட்டு சட்டமூலத்தை இயற்ற அரசுக்கு அறிவுறுத்தியது.இது 1968 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சுற்றுலா மேம்பாட்டுச் சட்டத்தின் மூலம் நிறைவேறியது.

  • அனைத்து உட்கட்டமைப்பு சேவைகளையும் வழங்கும் நோக்கில் தனியார் துறையினால் பல ஹோட்டல்களை உருவாக்கும் முன் ஏற்பாடோடு பெந்தொட்டவில் முதல் தேசிய விடுமுறை விடுதியானது நிறுவப்பட்டது.